வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையை ஒட்டி கொட்டப்பட்டுள்ள கட்டுமான கழிவுகள்!
குடியாத்தம் ,மே 31 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில் மர்மநபர்கள் சிலர் கட்டுமான கழிவுகளான பழைய உடைந்த செங்கல், உடைந்த காண்கிடிட் பாளங்கள் போன்றவற்றை சாலையை ஒட்டி தார் போடப்பட்டிருக்கும் இடம் வரை வண்டி வண்டியாக கொட்டியுள்ளனர். குடியாத்தத்தில் இருந்து ஜிட்டப்பள்ளி வரை நீண்டு இருக்கும் இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மற்றும் ஏராளமான லாரிகள் கார்கள் இரு சக்கர வாகனங்கள் போன்றவை
எப்பொழுதும் சென்று கொண்டே இருக் கும் பிஸியான சாலையாக உள்ளது. இது போன்ற கட்டுமான கழிவுகளை ஆங்காங் கே கொட்டிவைத்துள்ளதால் அந்த இடங் களில் பேருந்துகள் மற்றும் லாரிகள் போகும் போது சாலை ஓரங்களில் செல் லும் இரு சக்கர வாகனங்கள் ஒதுங்க ஓடம் இல்லமால் தருமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இது பாத சாரிகள் நடந்து போகவும் இடை யூறாக உள்ளது. இது போன்ற இடங் களில் விபத்துகள் அடிக்கடி நடக்க வாய்ப்பு உள்ளதால் உடனடியாக சாலை போக்குவரத்து துறையும், கிராம நிர்வா கமும், இப்படி சாலை ஓரங்களில் கட்டு மான கழிவுகளை. கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து. அவர்களுக்கு அபரா தம் விதித்தால் தான் மீண்டும் இது போ ன்ற செயல்களில் மர்மநபர்கள் ஈடுபட மாட்டார்கள் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக