கூடலூர் பேருந்து நிலையத்தில் படகு விட்டு நூதன போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடரும் மழையால் கூடலூர் பேருந்து நிலையம் மழை நீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது இதனால் முதியவர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் அவதி அடைகின்றனர் நிலைமை மோசமாக இருந்து வருவதால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த பாதிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து பேருந்து நிலையம் முன்பு கப்பல் விட்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் அடிக்கடி மழை நீர் தேங்கி நிற்கும் பிரச்சனை புதியதல்ல ஆனால் புதியதாக திறக்கபட்ட பேருந்துநிலையம் இது
சீரமைப்பு மற்றும் வடிகால் அமைப்புகள் சரியாக பராமரிக்கப்படாமை காரணமாக,நிலைமை மிக மோசமாகியிருக்கிறது. பயணிகள் கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் “மிதக்கும் பேருந்து நிலையம் வேண்டாம்! உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என முழக்கமிட்டனர். இந்நிலையில் சிலர் சின்னஞ்சிறு காகிதத்தால் செய்த கப்பல்களை தண்ணீரில் விட்டுப் பார்வையாளர்களை திருப்பிப் பார்த்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் கொஞ்சம் ஜெயசீலன் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக