கடலூரில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 மே, 2025

கடலூரில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

கடலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் கடலூரில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். 

இதையடுத்து டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது பாரதி சாலை வழியாக சென்று வந்தது. பேரணியில் செவிலியர் பயிற்சி மாணவிகள் பலர் கலந்து கொண்டு புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், தாசில்தார் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad