கோத்தகிரியில் புகையிலை மறுப்பு தினம் தொடர்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 மே, 2025

கோத்தகிரியில் புகையிலை மறுப்பு தினம் தொடர்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

 


கோத்தகிரியில் புகையிலை மறுப்பு தினம் தொடர்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.


 ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ம் தேதி உலக புகையிலை மறுப்பு தினம் கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக கோத்தகிரி பஸ் நிலையத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் கோத்தகிரி நகர பஞ்சாயத்து தலைவி திருமதி. ஜெயக்குமாரி அவர்கள் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு. கே. ஜே .ராஜு அவர்கள் சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் தமது உரையின் போது புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் உடல் நலக்குறைவு குறித்தும் புகைப்பிடித்தல் குறித்த சட்டம் குறித்தும் விரிவாக பேசினார். பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ்  விநியோகம் செய்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மற்ற போதைப் பொருட்களை விட புகை பிடிப்பதால்  தான் அதிக மக்கள் மரணம் அடைகிறார்கள். ஒரு சிகரெட் ஒருவருடைய வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை குறைக்கிறது. சிகரெட் புகையில்  உள்ள நிக்கோடின் என்ற ரசாயன பொருள் ஒரு கொடிய விஷமாகும். அது பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சிகரெட் புகையில் மட்டும் 4000 ரசாயன பொருட்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வு கூறுகிறது. அதில் 60 ரசாயன பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதனால் தலை சொட்டை விழுதல் ஆண்மை குறைவு ஆஸ்துமா சர்க்கரை வியாதி மாரடைப்பு போன்ற பல நோய்களுடன் போனஸ் ஆக புற்றுநோயும் வருகிறது. சிகரெட் பிடிப்பவரை விட அருகில் இருந்து புகையை சுவாசிக்கும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என மருத்துவம் கூறுகிறது. பொது இடங்களில் புகைப் பிடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற பல கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது. கோத்தகிரி ப்ளூ மெண்டல் நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் வாசுதேவன், செயலர் முகமது சலீம், துணை செயலர் பீட்டர் நிர்வாகக் குழு உறுப்பினர் பிரவீன், கோத்தகிரி வியாபாரிகள் சங்க தலைவர் மகாராஜா சந்திரன், செயலர் பரணி கேசவன், லியாகத் அலி, தொழிலதிபர் தாஜுதீன், அரிமா சங்கம் முன்னாள் தலைவர், ரோட்டரி சங்க நிர்வாகி தேவராஜ், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் நாகேந்திரன், கோத்தகிரி நகர பஞ்சாயத்து தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் ரங்கராஜன், சென்னை கிருத்துவ சமுதாயக் கல்லூரியின் முதல்வர் லெனின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்வின் போது பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad