2025 ஜூலை 9 ல் அனை த்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் போராட்டத்தை விளக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

2025 ஜூலை 9 ல் அனை த்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் போராட்டத்தை விளக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம்!

குடியாத்தத்தில் 2025 ஜூலை 9 ல்  அனை த்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் போராட்டத்தை விளக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம்!

குடியாத்தம் , மே 20 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை பொது வேலை நிறுத்தத்தை விளக்கி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத் திற்கு எல்பி எஃப் தொழிற்சங்க பேரவை கவுன்சில் வே கலைநேசன் சி ஐ டி யு மாவட்டத் துணைச் செயலாளர் சி சரவணன் பீடி சங்க செயலாளர் ஜி எஸ் மூர்த்தி மாவட்டத் துணைத் தலைவர் எஸ்பி சக்கரவர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள் தோழர்கள் எஸ் சிலம் பரசன் டி. செல்வமணி கே சி பிரேம் குமார் ஜோதி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் மாவட்ட  துணை தலைவர் பி காத்தவராயன்
துரைசெல்வம் கிருஷ்ணவேணி ஜலந்தர் கே எஸ் சாமிநாதன் டி ஆனந்தன் எம் திருவேங்கடம் எம் வீராங்கன் ஆகியோர் விளக்குரையாற்றினார்கள் ஒன்றிய பிஜேபி அரசு தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்பை கைவிடு தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத மக்கள் விரோத பிஜேபியை முறியடிப்போம் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிட வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைத்திட பீடி தொழிலாளர் உள்ளிட்ட இ பி எப் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் 6000 வழங்கு மத மோதல்களை தவிர்த்து மக்கள் ஒற்றுமையை பாதுகாத்திடு மக்கள் விரோத பிஜேபிதலைமையிலான மோடி அரசை நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் போன்றவர்களை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad