நெடுஞ் சாலையில் பாதாளக் குழி, விபத்துக்கள் அதிகரிப்பு!கண்டு கொள்ளாத அரசு உயர் பதவி அதிகாரிகள்!
வேலூர் ,மே 20 -
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி, சேண்பாக்கம் அருகே நெடுஞ்சாலை சந்திப்பில் சாலை பழுது ஏற்பட்டு, பாழடைந்துள்ளது. ஒரு மாத காலமாக இந்த இடத்தில் பல்வேறு விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்த சாலை மார்கமாக சுமார் பலமுறை கடந்து செல்கின்றனர். இதனை கண்டுகொள்ளாத மாநகராட்சி கமிஷனர் ஜானகி அவர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாத மேயர் சுஜாதா, அலட்சியமாக செயல்படும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, மக்கள் யாரிடம் கோரிக்கை வைப்பார்கள் என்று புலம்பும் அவலநிலை மழை காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள், ஆங்காங்கே உள்ள அரசு ஊழியர்கள் அரசு விதிமுறைப்படி பணிகள் மேற்கொண்டு, மக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர், மாவட்ட மக்கள் மீது முழு அக்கறை செலுத்தி இது போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வேண்டுகோள்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக