விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப் பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப் பாட்டம் !

விவசாயிகள் சங்கம் மற்றும் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப் பாட்டம் !

திருப்பத்தூர் ,மே 20 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்ட உரிமைகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 100% ஆதரவாக நான்கு சட்டத் தொகுப்பாக மாற்றியதும் மேலும் விவசாயிகளுக்கும் ஏழைஎளிய மக்களுக் கும் விரோதமாக செயல்படும் பாஜக அரசை கண்டித்தும் AITUC, CITU, LPF, INTUC, ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும் இதில் முக்கிய கோரிக்கைகளாக 
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிட வேண்டும் குறைந்தபட்ச ஊதிய மாதம் 26 ஆயிரம் நிர்ணயம் செய்திட வேண்டும் ஒப்பந்த தின கூலி வெளிச் சந்தை முறை பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் பழைய ஓய்வு திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் விலை உயர்வு கட்டுப்படுத்தி உணவு,மருந்து, விவசாய,பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கொண்டு வர வேண்டும் என  கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad