காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத் தலைவர் செ.நா.ஜனார்த்தனனுக்கு இலண்டன் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு!
காட்பாடி , மே 20 -
வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், துளிர் பள்ளி தலைமையாசிரியர் த.கனகா ஆகியோர் இலண்டன் மாநகருக்கு பயணம் செய்தனர இலண்டன் தமிழ் சங்கத்தின் உறுப்பினர் எம்.மணிபெரியகருப்பன் அவர்கள் வரவேற்று இலண்டன் ஈஸ்ட் ஹாமில் அமைந்துள்ள மகாலட்சுமி ஆலயம் இலண்டன் முருகன் ஆலயம் மற்றும் இலண்டன் தமிழ்ச்சங்கம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று செயல் பாடுகளை விளக்கினார்.மேலும் திருக் குறன் புத்தகத்தினை பரிசாக வழங்கி பாராட்டினார். முன்னதாக பி மயூரன் வரவேற்றார். அப்போது அவர் கூறியதா வது. இலண்டன் தமிழ் சங்கம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (UK) உள்ள ஒரு பழமை யான சங்கம் ஆகும். இச்சங்கம் 1936ம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் முனைவர் ஆர.கே.சண்முகம் செட்டியார், அவர்கள் மற்றும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.டி.கே.தங்க மணி, அவர்களால் உருவாக்கப்பட்டது. இலண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கு வந்தபோது, இந்தியாவின் தேச தந்தை காந்திஜி அவர்கள் வருகை புரிந்த பேறு பெற்றுள்ளது. 1960ம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கத்தில் நிறுவனமா கவும், சேவை மைய்யமாகவும் பதிவு பெற்றது. மேலும் இலண்டன் தமிழ் சங்கம் சார்பில் தமிழ் பள்ளிகளும் நடைபெற்று வருகிறது என்றார்.
முன்னதாக இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் ரெட்கிராஸ் சங்கத்தினரையும், மற்றும் இலண்டன் மாநகரின் பல பகுதி களையும் சுற்றி பார்த்தனர். இந்த பயணத்தின் போது செ.நா.குப்புசாமி, புதுதில்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுஜாதா, செ.கு.நேகா உள்ளிட்டோர் உடனிருந்தனர். முடிவில் காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக