மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி துவக்கம்...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434 பசலி வருவாய் தீர்வாயம்( ஜமாபந்தி) நேற்று துவங்கியது கொம்மராம்பாளையம், தோலாம் பாளையம், வெள்ளியங்காடு, காளம் பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளான இலவச வீட்டு மனை,, பட்டா பட்டா மாறுதல், நில அளவை,முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் ,உதவித்தொகை, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வருவாய் தீர்மானியத்தில் மனுவாக கொடுத்து நிவாரணம் பெற கலந்து கொண்டனர்துவக்க நாள் நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பிற்படுத்தோர். மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்.(வருவாய் தீர்வாய் அலுவலர்) சங்கீதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் தாசில்தார் ராமராஜ் வரவேற்று பேசினார். மேட்டுப்பாளையம் எம்எல்ஏ. ஏகே செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை அதிகாரியிடம் எடுத்து கூறினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக