பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதை முன்கூட்டியே தெரிவித்தது தேச துரோகம் - விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பகிரங்க குற்றச்சாட்டு. (இந்தியா , பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது தான் தான் என டிரம்ப் கூறியதற்கு, மோடி மௌனம் காப்பது வேதனைக்குரியது - மாணிக்கம் தாகூர் பேட்டி)
மதுரை மாவட்டம் உச்ச பட்டியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ 60.48 கோடி செலவில், 672 குடியிருப்பு கட்டிடங்களை தமிழக முதல்வர் மு .க ஸ்டாலின் , சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் உச்ச பட்டியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்ட பின், நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது தான் என்ன ட்ரம்பு கூறி வருகிறார் , அதற்கு மோடி எந்த பதிலும் அளிக்காமல், மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது. மேலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதை குறித்து , முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது தேச துரோகம் ஆகும் எனவும்,இது குறித்து பலமுறை பாராளுமன்ற கூட்டத் தொடரை கூட்டக் கூறியும், இதுவரை அதற்கும் செவிசாய்க்காதது மிகுந்த வேதனையாக உள்ளது எனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக