திட்ட வரைபடம் காண்பித்து பாடம் நடத்திய அதிகாரிகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

திட்ட வரைபடம் காண்பித்து பாடம் நடத்திய அதிகாரிகள்

 


குன்னூர்  மார்க்கெட்  கடை பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் போது திட்ட வரைபடம் காண்பித்து பாடம் நடத்திய அதிகாரிகள்  கொந்தளித்து வெளியேறிய வியாபாரிகள்.


நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்கெட் பகுதியில் உள்ள சுமார் 800 கடைகளை அப்புறப்படுத்தி புதிய கடைகளை கட்ட சுமார்  42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  கடந்த மாதம் பூமி பூஜை செய்யப்பட்டது. புதிததாக கட்டப்பட உள்ள இடத்தில் பொதுமக்களுக்கு வசதியாக 158 கார்களும் 158 இருசக்கர. வாகனங்கள்  நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது  என்றும் மேலும் phase 1 ....159 கடைகளும் phase 2......134 கடைகளும் phase 3....144 கடைகளும் phase 4 .....4 21 கடைகளுமாக மொத்தம் 678 கடைகள் அமைக்கப்பட உள்ளது.இந்த பணியை நாமக்கல்  பகுதியை சேர்ந்த GV கன்சக்சன் எடுத்து பணியை துவங்கியது. இதற்க்கு குன்னூர்  மார்க்கெட்  வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று குன்னூர்  சார் ஆட்சியர் சங்கீதா IAS  தலைமையில் நகராட்சி  ஆணையாளர் இளம் பருதி குன்னூர்  DSP. ரவி தாசில்தார் ஜவஹர்  முன்னிலையில் கூட்டம் நடைப்பெற்றது கூட்டத்தில் முதல் கட்டப்பணி எங்கிருந்து  துவங்குகிறது இரண்டாம் கட்டப்பணி எங்கிருந்து  துவங்குகிறது என அதிகாரிகள்  வரைப்படம் மூலம் காண்பித்தனர் இதற்க்கு  வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்  எனக்கூறி வெளியே வந்தனர்


இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கூறும் போது இன்று நடைப்பெற்று  கூட்டம் மாவட்ட ஆட்சியரிம் நேற்று வியாபாரிகள் சந்தித்து பேசினர் அப்போது மார்க்கெட் கடைகள் கட்டும் பணியில் வியாபாரிகளின் தேவைகள் என்ன  என்பதை தெரிந்துக்கொண்டு  திட்டத்தை தொடங்க வேண்டும் ஆனால் திட்டம் கைவிடப்பட மாட்டாது,என்றும் தெரிவித்தார். மேலும்  பொதுமக்கள்  கடைளை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்றும் வாடகை முறையாக கட்டாத ஒரு சில வியாபாரிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் எனவும் மேலும் 50 ஆண்டுகள்      குன்னூர் மக்களின் தேவைகளை அறிந்தே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இன்று நடைப்பெற்ற கூட்டம் குறித்து  மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்போம் முறையாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடைகளுக்கு நோட்டீஸ்  வழங்கப்படும் என்றார்.


இது குறித்து  வியாபாரி சங்க துணைத் தலைவர் நாசர்  தெரிவிக்கையில் வியாபாரிகளை அழைத்து சார் ஆட்சியர் திட்டங்களை விளக்கி கூறினார் ஆனால் இந்த திட்டத்தில் எங்களுக்கு எந்த வித உடன்பாடும் இல்லை என்றும் இது எங்கள் வாழ்க்கை  பிரச்சனை இதை  மாநில அளவில் கொண்டு சென்று தமிழக முதலமைச்சர்


 கவனத்திற்கு கொண்டு சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்று வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.


 மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப். M. A,.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad