கோவை வழியாக கேரளாவிற்கு பிரத்யேக உடையில் கடத்தப்பட இருந்த ரூ.70 லட்சம் பணம், 200 கிராம் தங்கம் பறிமுதல்...
கோவையை அடுத்த கேரளா எல்லையான வேலந்தாவளம் பகுதியில் நேற்று மாலை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவை வழியாக கேரளாவிற்குள் சந்தேகத்துக்குரிய சென்ற இரு சக்கர வாகனத்தை வழிமறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பிரத்யோக உடையில் கட்டு கட்டாக ரூ. 70 லட்சம் பணம் 200தங்கம் கடத்தியது கண்டறியப்பட்டது சட்டைக்குள் பல மறைவான பாக்கெட்டுகள் கொண்ட உடையில் பல இடங்களில் மறைத்து வைத்திருந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர் இதனை அடுத்து அந்த பணத்தினை பறிமுதல் செய்த போலீசார் கோவையை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக