கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத் தின் கீழ் சுமார் ரூபாய் 219 லட்சம் மதிப் பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடம் திறப்பு விழா!
குடியாத்தம் , மே 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் இன்று காலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 2 19 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவு சார் மையக் கட்டிடம் திறப்பு விழா தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி அவர்கள் குத்து
விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்
நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஜி எஸ் அரசு வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப் பினர் கல்லூர் ரவி நகராட்சி பொறியாளர் சம்பத் நகர அமைப்பு அலுவலர் சீனிவா சன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ஆட்டோ மோகன் அர்ச்சனா நவீன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக