தேசிய அளவிலான கராத்தே போட்டி திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் , வெள்ளி, வெண்கலம் உட்பட 25 பதக்கங்களுக்கு மேல் வென்று அசத்தல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

தேசிய அளவிலான கராத்தே போட்டி திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் , வெள்ளி, வெண்கலம் உட்பட 25 பதக்கங்களுக்கு மேல் வென்று அசத்தல்

 


தேசிய அளவிலான கராத்தே போட்டி திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் , வெள்ளி, வெண்கலம் உட்பட 25 பதக்கங்களுக்கு மேல் வென்று அசத்தல் - பதக்கங்களுடன் வந்த மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.



கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில்இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


இதில் தமிழகம் சார்பில் 25 பேர் பங்கேற்றனர்.தமிழகம் சார்பில் பங்கேற்ற மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ஆயுதம் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள் பொன்னுச்சாமி மற்றும் திருப்பதி ஆகியோர் தலைமையில் பயிற்சி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.ஏழு வயது முதல் 40 வயது வரையிலான மாணவர்களுக்காக தனித்தனியாக போட்டி நடைபெற்றது.தனி கட்டா பிரிவு,தனி குமிட்டி பிரிவுஉள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திருமங்கலத்தை சேர்ந்த மாணவர்கள் ஐந்து தங்கம்,ஐந்து வெள்ளி,15 வெண்கலம் உட்பட 25 பதக்கங்களைவென்றனர்.இந்த பயிற்சி பள்ளியைச் சேர்ந்த ஜெய்ஷா ஶ்ரீ என்ற மாணவி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தங்கப்பதக்கத்தை தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவர்கள் ரயில் மூலம் இன்று காலை திருமங்கலம் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.


பதக்கங்களை வென்ற மாணவ ,மாணவியர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் பதக்கம் வென்ற பயிற்சியாளர்களுக்கும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளதாக பயிற்சியாளர்தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad