திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள
மூலனூர் பேரூராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களைக் கொண்டு தினந்தோறும் துப்புரவுப் பணிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்து வருகின்றனர். பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் இப்பணிகளை துப்புரவுப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். குப்பைக் கிடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகளை மறுகழற்சி செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பருவநிலை மாறுபாடு காரணமாக சில நாட்களாக மழைபெய்யத் தொடங்கி இருக்கிறது. இதனால் துப்புரவுப் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி கூறியதாவது-
மூலனூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளை முழுமையாக தீர்க்கும் விதமாக பல முயற்சிகளை தொடங்கி இருக்கிறோம். மழை காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகள் வணிக நிறுவனங்களில் இருந்து அப்புறப்படுத்தும் கழிவுகளை பாலீதீன், பிளாஸ்டிக் கழிவுகளை தனியாகவும், எளிதில் மட்கக்கூடிய கழிவுகளைக் தனியாகவும் பிரித்து துப்புரவுப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். வீதிகளில் குப்பைகள் தேங்கி தொற்று நோய்கள் பரவாது காத்துக் கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தருவதன் மூலம் தூய்மையான பேரூராட்சிைய உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக