குடியாத்தம் 26 வது வார்டு 27 வது வார்டு செயல்பட்டு வந்த நியாய விலை கடை இடம் மாற்றத்தால் பொதுமக்கள் எதிர்ப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

குடியாத்தம் 26 வது வார்டு 27 வது வார்டு செயல்பட்டு வந்த நியாய விலை கடை இடம் மாற்றத்தால் பொதுமக்கள் எதிர்ப்பு!

குடியாத்தம் 26 வது வார்டு 27 வது வார்டு செயல்பட்டு வந்த நியாய விலை கடை இடம் மாற்றத்தால் பொதுமக்கள் எதிர்ப்பு! 
குடியாத்தம் , மே 23 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை தேரடி திடலில் செயல்பட்டு வந்த ரேஷன் கடை தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது  இந்த ரேஷன் கடை யில் தற்போது 1397 குடும்ப அட்டைகள் செயல்பட்டு வருகின்றன இதில் 70 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் தேரடி கடையில் உள்ளார்கள் இதனால் இந்த அனைத்து கார்டுகளும் புதிய நியாய விலை கடையில் இணைக்கப் பட்டிருந்த தால்  அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதி நகர மன்ற உறுப்பினர் சிட்டிபாபு தலை மையில் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு மீண்டும் ஏற்கனவே இருந்த கடையில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர் இது சம்பந்தமாக குடியாத்தம்சட்டமன்ற உறுப்பினர்  அமுலு விஜயன் அவர்கள் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாசம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று நாட்கள் பழைய கடையிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்  என்றும் உறுதி அளித்ததின் பேரில்  பொதுமக்கள் கலைந்து சென்றனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad