திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு  கூட்டம்!
திருப்பத்தூர் , மே‌ 23 -

திருப்பத்தூர்  மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றவிவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் வெல்லத்தில் கலப்படம் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முன்பு வெல்லத்தை உடைத்து காட்டிய விவசாயி, தனியாக இடம் தேர்வு செய்யப் பட்டு அரசு சர்க்கரை ஆலை அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை 

திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசௌந்தர வல்லி தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது விவசாயிகள் கலந்துகொண்டு தங்களின் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் வெல்லத்தில் கலப்படம் உள்ளதாக கூறி வெல்லத்தை  மாவட்ட ஆட்சியர் முன்பு  விவசாயி உடைத்து காட்டினர். மேலும் சர்க்கரை ஒரு கிலோ 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது  வெல்லம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெல்லத்தில் லாபம் அதிகமாக உள்ள தால் வெள்ளத்தில் சக்கரையை கலப் படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது என குற்றம்சாட்டினர்.அப்போது விவசாயிடம் இந்த வெல்லம் எந்த கடை யில் விற்பனை செய்யப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பினார் அதற்கு விவசாயி பெரும்பாலான கடைகளில் இது போன்ற கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் அவர் இது தொடர் பாக எவ்வித நடவடிக்கையும் எடுப் பதில்லை எனவும் குற்றம்சாட்டினர். 
மேலும் வியாபாரிகள் வியாபார நோக்கத் தில் இது போன்று கலப்பட செயலில் ஈடுபட்டு விற்பனைசெய்யப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் கூறினர். மேலும் தற்போது வரை சர்க்கரை ஆலை தனியா ருக்கு சொந்தமானதா, அரசாங்கத்திற்கு சொந்தமானதா என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை எங்களுக்கு தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு சக்கரை ஆலை அமைத்து தரக்கோரி இதுவரை ஐந்து மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் கமிஷனரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித் தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என விவசாயிகளுக்கு கூறினார். 
மேலும் இந்த விவசாய குறை தீர்வுகூட்டத் தில் துறை சார்ந்த அதிகாரிகள்,விவசாயி கள் பலரும் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad