ஊராட்சி மன்ற தலைவரா? அல்லது இந்த ஊரின் ரௌடியா? ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பத்தூர் ,மே 23 -
திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவரா? அல்லது இந்த ஊரின் ரௌடியா? காக்கணாம்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேள்வி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காகனம் பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கிளை செயலாளர் சிங்காரம் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் ராஜபாளையம் பொஜ்ஜி வட்டத்தில் மினி டேங்க்கை சுற்றியுள்ள வாழைமரம் தண்ணீர் பிடிக்கவும் போக்கு வரத்துக்கும் தெருவிளக்கு ஸ்விட்ச் போடவும் இடைஞ்சலாக உள்ளதை அகற்ற வேண்டும். சுண்ணாம்புகாளை பேருந்து நிறுத்தம் அருகே மினி டேங்க் மற்றும் ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி குடிநீர் மாசுபடுவதை சரி செய்ய வேண்டும் அருந்ததியர் காலணி யில் நீண்ட காலமாக பழுந்தடைந்துள்ள மினி டேங்க் மற்றும் ஆழ்துளை கிணற் றை சரி செய்து அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், மேலும் ஊராட்சி மன்ற தலை வரின் கணவர் சபாபதி அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜ் என்பவரை எவ்வளவு செலவு செலவா னாலும் பரவாயில்லை உன்னை ஒரு கை பாக்காம விட மாட்டேன் என மிரட்டி வருவ தை குறித்தும் கண்டனம் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இவர் ஊராட்சி மன்ற தலைவரா? அல்லது இந்த ஊரின் ரௌடியா? எனவும் கேள்வி எழுப்பி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்தனர்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக