அரக்கோணத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர். ஜே யு சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி
2ம் நாளில் தலைவர்கள் மனு!
ராணிப்பேட்டை ,மே 23 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைகளை தீர்க்கும் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் ஜெயு. சந்திரகலா தலைமை யில் நடைபெற்று வருகிறது இரண்டாம் நாளான இன்று உரியூர் அனந்தாபுரம் மேல்பாக்கம், மோசூர் உள்ளிட்ட பத்து கிராம கணக்கு வழக்கு ஆய்வுடன் அந்தந்த ஊர் மக்களிடம் மனு களையும் கலெக்டர் பெற்றுக் கொண்டார் . அந்த வகையில் மேல்பாக்கம் ஒன்றிய கவுன்சிலரும் விசிக நெமிலி ஒன்றிய செயலாளருமான நரேஷ் குமார் மனு ஒன்றை அளித்தார் .
அதில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கபட்ட 2 ஏக்கர் நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது ஆகவே அதனை மீட்டு 150 குடும்பங்களுக்கு வீட்டுமனை தர வேண்டும் என கேட்டு கொண்டார்
அப்போது விசிக மாநில இளைஞரணி துணை செயலாளர். வழக்கறிஞர் தமிழ்மாறன் திமுக ஒன்றிய இளைஞரணி சுந்தரமூர்த்தி விசிக மாதேஷ் ரவீந்திரன் உடன் இருந்தனர்
மோசூர் ஊராட்சி கிராம தலைவர் சம்பத் அடுக்கடுக்கான கோரிக்கை மனுக்களை வழங்கினார் அவற்றில் ரயில் நிலையம் செல்ல மெயின் சாலையில் இருந்து குறுக்குசாலை அமைத்துதா வேண்டும்
மோசூர் முழுவதும் உள்ள சாலைகளுக்கு மின் விளக்கு அமைத்துதா வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். உடன் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார் இது போல் அம்பரிஷபுரம் தலைவா ராதா அம்பரிஷபுரம் தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டு மென்றார் திமுக வழக்கறிஞர் ராம மூர்த்தி பொய்பா க்கம் சாலைகள் சீரமைத்துதா வேண்டும் என மனு அளித்தார் மக்களின மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருவாய் துறையினருக்கு கலெக்டர் உத்தரவு வழங்கினார். சனி ஞாயிறு திங்கள் என மூன்று தினங்கள் லீவிற்கு பின் ஜமாபந்தி 27ந்தேதி துவங்குகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக