அரக்கோணத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

அரக்கோணத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி!

அரக்கோணத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி!

ராணிப்பேட்டை , மே‌‌ 23 -

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2025 ஆண்டு கிராம கணக்கு வழக்குகள்சரி பார்க்கவும் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் ஐந்து நாட்கள் ஜமாபந்தி தொடங்கியது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை தாங்கி நடத்தினார் தாசில்தார் வெங்க டேசன் வரவேற்றார் ஜமாபந்தில் புளிய மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா பல்வேறு கோரிக்கை மனு கொடுத்தார் அதில் ஸ்ரீராம் நகர மக்களுக்கான முப்பதாயிரம் லிட்டர் தண்ணீர் டேங்க் பழுதடைந்து போனதால் மக்கள் குடிநீருக்கு  புதிய டேங்க் அமைத் துத் தரும்படி கேட்டு கொண்டார் அது போல் புது கேசாவரம் ஊராட்சி மன்ற தலைவர் நவாஸ் அகமது தனது ஊராட்சி யில் உள்ள மாந்தோப்புபகுதி மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டு மென உட்பட பல கோரிக்கை மனு கொடுத்தார்  இதுபோன்று அம்மனூர் ஊராட்சி  கண்ணன் நகரில்  சாலை ஆக்கிரமிப்பால் பல ஆண்டு பாதிக்கபட்டு வருவதால் சாலை மீட்டு தர வேண்டும்  கண்ணன் நகர் குடியிருப்பு சங்க செயலா ளர் மணியரசு நிர்வாகிகளுடன் மனு கொடுத்தார் மேலும் பல்வேறு மக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வீட்டு மனை வழங்கும்படி மனு கொடுத் தனர் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் வருவாய் துறை அலுவலர் கள் அனைவரும் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad