கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 மே, 2025

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பங்கேற்பு!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  பங்கேற்பு!
ராணிப்பேட்டை , மே 02 -

வேலூர் மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி களில் - 2025-26ம் நிதி ஆண்டுக்கான  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற் கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. இதில் சிறப்பு  அழைப்பாளராக
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கி பேசியதாவது
தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் அனைவ ருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படு கிறது. அதன்படி நெமிலி ஊராட்சி ஒன்றி யத்தில் மட்டும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தரப்படுகிறது. அதன்படி நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம்369 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது.
வீடு ஒதுக்கீடு ஆணை பெற்ற பயனாளிகள் விரைந்து வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டம் கலெக்டர் சந்திரகலா , திட்ட இயக்குனர் ஜெயசுதா, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், ஒன்றிய குழு தலைவர் வடிவேலு.பிடிஓக்கள் ஜெய ஸ்ரீ,சிவகுமார்ஒன்றியசெயலாளர்கள்
ரவீந்திரன் பெருமாள் மணிவண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad