மாநில அளவிலான சப் ஜூனியர் கராத் தே போட்டி 36 மாவட்டங்கள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

மாநில அளவிலான சப் ஜூனியர் கராத் தே போட்டி 36 மாவட்டங்கள் பங்கேற்பு!

மாநில அளவிலான சப் ஜூனியர் கராத் தே போட்டி 36 மாவட்டங்கள்  பங்கேற்பு! 

ராணிப்பேட்டை , மே 23 -

ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக 110  மாணவ மாணவிகள் பங்கேற்பு!
 தங்கம் 1 வெள்ளி-9 பிரான்ஸ் 6 பதக்கங்கள் வென்று மாவட்டத்திற்கு பெருமை!

திருச்சி ஜமால் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர்  கராத்தே போட்டி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள 36 மாவட்டங்கள் பங்கேற்றனர். இதில் 2000 மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றார்கள் இந்த கராத்தே போட்டியை தமிழ்நாடு அமைச்சர் கே என் நேரு அவர்கள் தொடங்கி வைத்தார் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பாக 110  கராத்தே மாணவ மாணவிகள் பங்கேற்று 1 தங்கம் 9 வெள்ளி 6 பிரான்ஸ் பதக்கங்களை வென்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மற்றும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தார்கள் 1 தங்கம் வென்ற 9 வயது மாணவன் கதிர் அவர்களை கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தி அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றார்  இந்த மாணவன் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் நேஷனல் கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளார் நடைபெற உள்ள போட்டியிலும் வெற்றி பெற அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் வாழ்த்தினார் .மாவட்ட அவைத்தலைவர் ஏ கே சுந்தரமூர்த்தி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ் வினோத் M.C ராணிப்பேட்டை கராத்தே பயிற்சியாளர் தமிழரசு மற்றும் பலர் உடனிருந்தனர்.


தமிழகத்தில் சிறப்பு செய்தியாளர் சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad