கோவை 4வது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை தொடக்கம்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு எண் 4க்கு உட்பட்ட ஸ்ரீ கார்த்திக் நகரில் ரூபாய் 28.50 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் வைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி நேற்று பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார் இதில் வடக்கு மண்டல செயலாளர் கதிர்வேல் வேல், நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல்சாமி, சரவணம்பட்டி பகுதிவள்ளல் செயலாளர் சிவா என்ற பழனிச்சாமி ,உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், வட்டக் கழகச் செயலாளர் ரங்கசாமி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக