தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

 


தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!


தமிழ்நாட்டில்  2025- 2026 கல்வியாண்டிற்கான அரசு,  அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ,ஜூன் 2 அன்று திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி செல்லுமா என கேள்விகள் எழுந்துள்ளது. இப்போது பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கி வரும் காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி செல்கிறதா என்கிற கேள்விகள் அதிகமாக எழுந்த நிலையில் ஜூன் 2 அன்று ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad