அரக்கோணம் அருகே குமினி பேட்டை மதுரா கிராமத்தில் இருளர்களின்42 வீடுகளும் திறக்க பட வேண்டும்எம்எல்ஏ சு.ரவி வலியுறுத்தி பேச்சு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

அரக்கோணம் அருகே குமினி பேட்டை மதுரா கிராமத்தில் இருளர்களின்42 வீடுகளும் திறக்க பட வேண்டும்எம்எல்ஏ சு.ரவி வலியுறுத்தி பேச்சு!

அரக்கோணம் அருகே குமினி பேட்டை மதுரா கிராமத்தில்  இருளர்களின்
42 வீடுகளும் திறக்க பட வேண்டும்
எம்எல்ஏ சு.ரவி வலியுறுத்தி பேச்சு!
ராணிப்பேட்டை , மே 26 -

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி குமினி பேட்டை மதுரா கிராமத்தின் இருளர்கள் குடியிருக்கும் வீடுகளின் வழியாக கன்னியாகுமரி திருப்பதி சாலை வருகிறது இதனால் அங்கு குடியிருந்த இருளர் குடும்பத்தினருக்கு அருகில் வீடு கட்டி கொடுக்க அன்றைய முதல்வர் எடபாடி யாரிடம் கோரிக்கை வைத்த போது உடனடியாக ரும கோடிகள் ஒதுக்கீடு செய்து 42 குடியிருப்புகளையும் கோவில் மற்றும் அங்கன்வாடி மையம் மேல் தொட்டி என பல்வேறு வசதி களையும்  செய்து கொடுத்தார். ஆனால் நான்கு வருடம் ஆகியும் கட்டி முடிக் கபட்டவைகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் போதிய வசதி இல்லாமல் உள்ள இருளர் குடும்பத்தினர் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளை திறக்க  நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என செய்தியாளர்களிடம் வலியுறுத்தி கூறினார். உடன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர். பி.ஏ.பாலு நெமிலி ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர். பிரகதீஸ்வரன் மற்றும் அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள்  உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad