அரக்கோணத்தில் நடைபெற்றபோலீஸ் பொதுமக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பில் ஐம்பெரும் விழா! ஐ பி எஸ் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , மே 26 -
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தனியார் மண்டபத்தில் போலீஸ் பொது மக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பில் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா! மற்றும் விருது வழங்கும் விழா! கண்ணொளி அறக்கட்டளை துவக்க விழா! அப்பாசாமி புத்தக வெளியீட்டு விழா! மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் என ஐம்பெரும் விழா நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர். டாக்டர்.எஸ். என். ஆர். தலைமை தாங்கினார்.அகிலன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக சென்னை காவல்துறை ஐடிஓஎல் கடத்தல் தடுப்புப் பிரிவு டாக்டர். சிவகுமார். ஐ.பி.எஸ் கலந்து கொண்டு ஐம்பெரும் விழாவை சிறப்பு செய்து நல உதவிகளையும் வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக மோடி மிஷன் தலைவர் அருள் தாஸ் அறம் அறக் கட்டளை தலைவர் &முனைவர் கலை நேசன் ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் துரைபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருதுகளை வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர். செங்குட்டுவேல் காவல்துறைவிருதுகளை அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் தங்க குருநாதன் தாலுக்கா காவல் ஆய்வாளர். பழனிவேல் பெற்றுக் கொண்டனர்.மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற அனை வருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக