மானாமதுரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இவ்விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, மானாமதுரை நகரக் கழக செயலாளர் திரு க. பொன்னுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர்மன்ற தலைவர் திரு எஸ். மாரியப்பன் கென்னடி, நகர மன்ற துணைத் தலைவர் திரு பாலசுந்தர், மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி ஏ. ஆர். பி. முருகேசன், அரசு அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள், இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக