இறுதிச் சடங்கின்போது நீர்மாலைக்கு நீர் எடுக்க முடியாமல் தவித்து வரும் பொதுமக்கள், - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

இறுதிச் சடங்கின்போது நீர்மாலைக்கு நீர் எடுக்க முடியாமல் தவித்து வரும் பொதுமக்கள்,


மானாமதுரை மூங்கில்ஊரணி அருகில் உள்ள ரெட்டையூரணியில் இறுதிச் சடங்கின்போது நீர்மாலைக்கு நீர் எடுக்க முடியாமல் தவித்து வரும் பொதுமக்கள், பீஸ் கேரியரை எடுத்து வைத்துக்கொள்ளும் அவலம்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூங்கில்ஊரணி பகுதியில் உள்ள ரெட்டையூரணி அருகில் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் நீர் தொட்டி சரியான பராமரிப்பின்றி இயங்காத சூழ்நிலையில் பொதுமக்கள் இறுதிச் சடங்கில் நீர்மாலை எடுக்கச் செல்லும்போது தண்ணீர் இல்லாததால் பெரும் சிரமத்திற்கும், மன வேதனைக்கும் உள்ளாகி வருகின்றனர். 


இதுகுறித்து சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், "ரெட்டையூரணி அருகில் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் நீர் தொட்டியானது சரியான பராமரிப்பின்றி இருப்பதால், இறுதி சடங்கில் நீர்மாலைக்கு தண்ணீர் எடுக்க செல்லும் போது தண்ணீரின்றி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் கூட நடைபெற்ற ஒரு இறுதி சடங்கில் நீர்மாலைக்கு தண்ணீர் எடுக்க சென்ற இடத்தில் நீர்தொட்டியில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு மூலமாக தண்ணீர் எடுக்கலாம் என்று பார்த்தபோது பீஸ் கேரியர் இல்லாததால் நிர்மாலை எடுக்கச் சென்றவர்கள் திகைத்துள்ளனர். பின்னர் அருகில் இருந்த வீட்டாரிடம் நீரை வாங்கி சென்றுள்ளனர். மேலும் இறுதி சடங்கு நிர்மாலைக்கு கூட நிம்மதியாக நீரொடுக்க முடியாத அவல நிலையில் இப்பகுதி பொதுமக்கள் இருந்து வருவது மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், இப்பகுதியில் சிலர் பீஸ் கேரியரை எடுத்து வைத்துக்கொண்டு தங்கள் சொந்த உபயோகத்திற்கு ஆழ்துணை கிணற்று நீரை உபயோகப்படுத்தி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்".


எனவே இரட்டையூரணி அருகிலுள்ள சின்டெக்ஸ் டேங்க், நீர்தொட்டி, ஆழ்துளை கிணறு மற்றும் பீஸ் கேரியர் ஆகியவற்றை பராமரித்து சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களின் இந்த அவல நிலையைக்கு முற்றுப்புள்ளி வைத்திட பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad