பி டி ஓ அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கிய முதல் வருக்கு நன்றி தெரிவித்து நெமிலி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

பி டி ஓ அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கிய முதல் வருக்கு நன்றி தெரிவித்து நெமிலி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்!

பி டி ஓ அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கிய முதல் வருக்கு நன்றி தெரிவித்து நெமிலி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்!

அரக்கோணம், மே.22 -

இராணிப்பேட்டைமாவட்டம்,நெமிலி 
பி டி ஓ  அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் வடிவேல் தலைமை வகித்தார். பிடிஓக்கள் ஜெயஸ்ரீ, சிவக் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித் தனர். இந்த கூட்டத்தில் அந்தந்த பகுதி யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை களை வைத்தனர். நெமிலி டவுன் பஞ். க்கு உட்பட்ட பகுதியில் பி டி ஓ  அலுவல கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் காந்தி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து சேர்மன் வடிவேல் பேசியதாவது, நெமிலி யூனியன் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக அளிக்கலாம். மேலும் தங்கள் பகுதிக்குட்பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு  நேரில் சென்று அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு செய்யப்பட்ட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தெரிவித்தால், எங்கு கட்டடம் கட்ட வேண்டுமோ அதற்கு தீர்மானம்  உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் யூனியனுக்கு உட்பட்ட சிறுணமல்லி கல்லாறு மேம்பாலம், பனப்பாக்கம் _  உளியநல்லூர் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண்,  மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பலமாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதாக அவர் பேசினார். இதில் யூனியன் கவுன் சிலர்கள், யூனியன் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad