இராமநாதபுரம் பரமக்குடி அருகே இரண்டு வயது குழந்தையின் தலை துண்டித்து கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

இராமநாதபுரம் பரமக்குடி அருகே இரண்டு வயது குழந்தையின் தலை துண்டித்து கொலை.

இராமநாதபுரம் பரமக்குடி அருகே இரண்டு வயது குழந்தையின் தலை துண்டித்து கொலை,

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள 
 எமனேஸ்வரம் கிறிஸ்துவ தெருவை சேர்ந்த தேசிங்குராஜா-டெய்சி தம்பதியினரின் லெமோரியா என்ற இரண்டு வயது குழந்தையை அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மாமா சஞ்சய் குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்து விட்டு உடலை வீட்டின் பின்புறம் போட்டு விட்டு தலையை அருகே உள்ள ஊரணியில் வீசி சென்று உள்ளார். 

தகவல் அறிந்த எமனேஸ்வரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பந்தமாக தேடப்பட்ட சஞ்சய் போலீசில் சரணடைந்துள்ளார். 

இரண்டு வயது குழந்தையின் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குழந்தையின் கொலை சம்பவம் தொடர்பாக பரமக்குடி எமனேஸ்வரம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad