கோவை விமான நிலையத்தில் ரூ 5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

கோவை விமான நிலையத்தில் ரூ 5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்

 


கோவை விமான நிலையத்தில் ரூ 5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் 



கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம், போதைப் பொருட்கள் ,உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும். பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வபோது பயணிகளிடம்  கடத்தல் தங்கம் போதை பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதுடன் அதிகாரிகள் சோதனைகளில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த கேரளாவை சேர்ந்த பயணி ஒருவருடன் விமான நிலையம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவ்வப்போது அவரிடம் 5கோடி ரூபாய் மதிப்பு மதிப்பிலான கஞ்சா போதை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதை அடுத்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad