வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் கல்லார் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா கேட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் மனு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் கல்லார் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா கேட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் மனு

 


மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய் தீர்வாய  நிகழ்ச்சியில் கல்லார் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு  பட்டா கேட்டு முன்னாள் ஊராட்சி  தலைவர்  மனு


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய்  தீர்வாய நிகழ்ச்சியில் மூன்றாவது நாளாக இன்று ஓடத்துறை ஊராட்சி கல்லார் ஆலமரத்தூர் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் இருபுறமும் குடியிருந்து வரும் 13  குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா கேட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் தங்கவேலு தலைமையில் ஜமாபந்தி அலுவலர் சங்கீதா விடம் மனு கொடுத்தனர். தா சுதார் ராமராஜ் தலைமை இடத்து வட்டாட்சியர்செல்வராஜ் மண்டல துணை வட்டாட்சியர்,சங்கர்லால், வட்ட வழங்கல் அலுவலர் விஜயா, நில வருவாய் ஆய்வாளர் கவிதா, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடன் உள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad