ஆசிய கண்டத்தில் வேறேங்கு நடைபெறதா கடலூர் மாவட்டத்தில் குறவஞ்சி என்கிற வினோத திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

ஆசிய கண்டத்தில் வேறேங்கு நடைபெறதா கடலூர் மாவட்டத்தில் குறவஞ்சி என்கிற வினோத திருவிழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் நந்திமங்கலம் கிராமத்தில் ஏந்தி அருளி இருக்கும் ஸ்ரீ நல்லம்மா காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது  


இந்த ஆலயத்தில் வைகாசி பெருவிழா சித்திரை மாதம் 30 ஆம் தேதி 13-05-2025 செவ்வாய்க்கிழமை காப்பு அணிவிக்கப்பட்டு 12 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும் 


இரண்டாம் நாள் அபிஷேக ஆராதனையும் மூன்றாம் நாள் பிடாரி வீதி உலாவும் நான்காம் நாள் அம்மன் வீதி உலாவும் ஐந்தாம் நாள் அம்மன் வீதி உலாவும் ஆரம் நாள் அம்மன் வீதி உலாவும் ஏழாம் நான் குறவஞ்சி மதியம் 2 மணி அளவில் இரவு அம்மன் வீதி உலாவும் எட்டணாள் அம்மன் வீதி உலாவும் ஒன்பதாம் நாள் அம்மன் வீதி உலாவும் பத்தாம் நாள் அம்மன் வீதி உலா பதினோராம் நாள் திருத்தேர் பன்னிரண்டாம் நாள் கெடா வெட்டு மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று இந்நிகழ்வு நிறைவு பெறும்



இதில் முக்கிய நிகழ்வான வினோத திருவிழா குறவஞ்சி என்கிர ஆள் புடி திருவிழா மூன்று நான்கு தலை முறைக்கு மேல் இந்த திருவிழா ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் குறவன் குறத்தி போலீஸ் வெட்டியான் போன்ற வேடங்கள் இடம்பெறும் கருப்பு மையை உடம்பு முழுவதும் பூசிக்கொண்டு இடுப்பில் சலங்கை கைழுத்தில் பாசிமணி கையில் ஒரு ஈட்டியும் வேடம் அணிந்து இருப்பார்கள் ஊரு, நான்கு புறமும் எல்லைகளை மிதித்து குறத்தியுடன் ஆடி பாடி இந்நிகழ்வு நடைபெறும் இதைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் அப்போது ஓடி வரும்போது குறவஞ்சி அரை சிங்கே ஒரு என்று அலரல் சத்தம் இடும்போது திகில் ஊட்டும் அச்சத்தில் பொதுமக்கள் இருப்பார்கள் அதே சமயத்தில் இதைக் காண இளைஞர்கள் மக்கள் மகிழ்வோடு இருப்பார்கள் கடைசியாக கோவில் மணி அடித்தவுடன் வேடம் அணிந்த அணைவரும் ஆலயத்துக்குள் வருவார்கள் ஆக்ரோசத்துடன் கோவிலுக்குள் சுற்றி வந்து அவர்களுக்குமாங்காய் கொடுக்கப்படும் இந்த மாங்காய் கடித்து சாப்பிடுவார்கள் மாங்காய் துண்டை குழந்தை பாக்கியம் இல்லாத ஜோடியில் வாங்கி சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கிடைக்குமாம் மேலும் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்தால் அவர்கள் மீது தன் கரிமையினை பூசி விளையாடுவார்கள் கடைசியாக ஊர் எல்லையில் ஏழு வெள்ளைக்கோடு இட்டு ஈட்டியை தாண்டி சென்று குளியலுக்கு செல்வார்கள் இத்துடன் இத் திருவிழா நிகழ்வு நிறைவு பெறும் சிதம்பரம் டு குமராட்சி திருச்சி நான்கு வழி சாலை அருகே இந்த ஆலயம் அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad