கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் ஸ்டெப் ஒன் பரதநாட்டிய கலை கூடம் சார்பிலும், நந்தகுமார் மற்றும் பாவேந்தன் ஆகியோர் ஏற்பாட்டில், கிராமபுற மாணவர்களுக்கான முதல் முறை நாட்டியாஞ்சலிக்கான சலங்கை பூஜை குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நாட்டியாஞ்சலி விழாவில் ஸ்டெப் ஒன் இசை நாட்டிய கலைக்கூடத்தின் ஆண்டு விழா மற்றும் கிராமபுற மாணவர்களுக்கு பரதநாட்டிய கலையை கற்பித்து,ஊக்குவிக்கும் விதமாக சலங்கை பூஜை விழா நடைபெற்றது.
கிராமபுற மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கவுரவபடுத்துதல், உள்ளிட்ட விழா நடைபெற்றதில்,
சிறப்பு விருந்தினர்கள் பட்டிமன்ற பேச்சாளரும், உலக சாரனையாருமான சேலம் ஜஸ்வர்யா, பட்டிமன்ற பேச்சாளர் தணிகைவேலன், சமூக செயற்பாட்டாளர் அருணாதேவி, ஏசியன் கோல்ட் மெடலிஸ்ட் நிவேதா செல்வம், ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பரநாட்டிய ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பரதநாட்டிய மாணவர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக