போதிய இட வசதி இல்லாததால் நெடுஞ்சாலையோரம் நடைபெறும் கோழி சந்தையால் விபத்து ஏற்படும் அபாயம் வடலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் சனிக்கிழமைகள் தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு வடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நெய்வேலி குறிஞ்சிப்பாடி, கடலூர் மந்தாரக்குப்பம், விருதாச்சலம் ஸ்ரீமுஷ்ணம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வளர்த்து வரும் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வழக்கமாக உள்ளது
இந்நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தங்கள் வளர்த்து வரும் கால்நடைகளான கோழி ,புறா முயல் உள்ளிட்ட வகைகளை சாலையோரம் நின்று விற்பனை செய்து வருகின்றனர் இதனால் வடலூர் கடலூர் சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக