திருவள்ளூரில் பெற்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 மே, 2025

திருவள்ளூரில் பெற்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு


 திருவள்ளூரில் பெற்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன்(41) என்பவர் தமது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 2020-இல் போக்ஸோவில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து திருவள்ளுர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சரஸ்வதி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரஸ்வதி, மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தந்தை முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும், ₹1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.இதனையடுத்து முருகனை காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad