தூத்துக்குடி - மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

தூத்துக்குடி - மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தூத்துக்குடி - மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல்.
         

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கனை சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு 23.05.2025 அன்று மாலை 03.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிப்பிக் கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த சுயதொழில் புரிய ஆர்வமுள்ள முன்னாள் படைவீரர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
 

மேலும், சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்துகொண்டு தங்கள் மனுக்களை இரட்டைப் பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
     

மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி, அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad