கூடலூர், தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு முகாம்
கூடலூர் தேவர்சோலை சாலையில் இயங்கி வரும் தோட்டத் தொழிலாளர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் வளாக நேர்காணல் நடைபெற்றது பயிற்சி மைய ஆசிரியர் இராஜா வரவேற்றார் பயிற்சி நிலைய முதல்வர் ஷாஜி M. ஜார்ஜ் தலைமை தாங்கி நேர்முக தேர்வினை துவக்கி வைத்தார் கோவை பிரீமியர் மில்ஸ் நிறுவன தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஜெயதிலகன் வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்த்தார் தொடர்ந்து கோவை மாவட்டம் அவினாசி சாலையில் இயங்கி வரும் பிரீமியர் மில்ஸ் நிறுவனம் தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஜெயதிலகன் மற்றும் மின் பொறியாளர் லோகேஷ். ஆகியோர் பயிற்சி நிலையத்தில் படிக்கும் பிட்டர், வயர்மேன் மற்றும் எலக்ட்ரிசியன் பிரிவு மாணவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தினார்கள்.
இந்நேர்காணலில் 60 பயிற்சியாளர்கள் பங்குபெற்றனர், பயிற்சி நிலையத்தின் பொருத்துநர், மின்கம்பியாளர் மற்றும் எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் டெக்னிஷியன் பிரிவுகளிலுள்ள 20 பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பயிற்சியாளர்களுக்கு Rs.18,000/- ஊதியம் வழங்கப்படும், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவில் ஆசிரியை. K. அம்மினி நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக