பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நிறைவு.... - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நிறைவு....


பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நிறைவு.... 


சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார் 

 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், 1434 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி, தஞ்சாவூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) கோ.பூஷண குமார் தலைமையில்  நடைபெற்றது.


ஜமாபந்தி 4ஆவது நாள் பேராவூரணி உள்வட்ட கிராமங்களான பின்னவாசல், ஆதனூர், நாட்டாணிக்கோட்டை, மணக்காடு, நெல்லியடிக்காடு, ரெட்டவயல், சாணாக்கரை, பேராவூரணி பகுதி - 1, 


பகுதி - 2, சொர்ணக்காடு மற்றும் உள் கிராமங்களான படப்பனார்வயல், முடப்புளிக்காடு-1 பிட், வீரக்குடி, ரெட்டவயல் உக்கடை, கொரட்டூர், கொரட்டூர் உக்கடை, முடப்புளிக்காடு-2 வது பிட், ஆண்டாக்கோட்டை, சித்தாதிக்காடு, ரெங்கநாயகிபுரம், பனஞ்சேரி, வலப்பிரமன் காடு ஆகிய கிராமங்களுக்கு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.


குடிகள் மாநாடு அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு குடிகள் மாநாடு நடைபெற்றது. வட்டாட்சியர் என்.சுப்பிரமணியன் வரவேற்றார். தஞ்சாவூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) கோ.பூஷண குமார் சிறப்புரையாற்றினார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, ஸ்மார்ட் குடும்ப அட்டை ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கிப் பேசினார். 


இதில், கே.ஆர்.புரம் சீனிவாசன், பெருமகளூர் வி.பி.ஜெயச்சந்திரன், ஆதனூர் அருளானந்தம், வீரியங்கோட்டை முகுந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.


வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் கவிதா, துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், காவல்துறை, வேளாண் துறை, மின்துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad