குடியாத்தம் கெங்கை அம்மன் திரு விழாவின் போது திருடிய 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்!
குடியாத்தம் , மே 28 -
17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது போலீசார் விசாரணை !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபால புரம் கெங்கையம்மன் திருவிழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது இதில் ஏராள மான இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் குடியாத்தம் நகர போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் இதனிடையே இன்று குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் குடியாத்தம் நகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை பிடித்து விசார ணை மேற்கொண்ட போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித் தனர் இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் குடியாத் தம் திருவிழாவில் இருசக்கர வாகனங் களை திருடியது தெரிய வந்தது மேலும் அவர்களிடம் இருந்த 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீ சார் மேலும் இருசக்கர வாகனங்களை திருடன் திருடிய 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி வெங்கடேசன் (வயது 19) வயது ஆகிய இருவரை குடியாத்தம் நகர காவல் துறையினர் கைது செய்து மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக