"தென்மேற்கு பருவமழையால்''ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தயாராக உள்ளது- மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எம்பி ஆ. ராசா பேட்டி.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

"தென்மேற்கு பருவமழையால்''ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தயாராக உள்ளது- மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எம்பி ஆ. ராசா பேட்டி..


"தென்மேற்கு பருவமழையால்'' ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தயாராக உள்ளது- மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எம்பி ஆ. ராசா பேட்டி..


கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி தொகுதி எம் பி யும் ,திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றை பார்வையிட்டார்.அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்போது மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள்வெள்ள பாதிப்புகளைதிறம்பட சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடைப்பட்ட மின்சாரத்தை மீண்டும் வழங்கிட போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகமும் தயாராக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad