சிறுமுகை எஸ்.ஐ.வி. விஜயலக்ஷ்மி பள்ளியின் 60 ஆம் ஆண்டு வைரவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 மே, 2025

சிறுமுகை எஸ்.ஐ.வி. விஜயலக்ஷ்மி பள்ளியின் 60 ஆம் ஆண்டு வைரவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது


 சிறுமுகை எஸ்.ஐ.வி. விஜயலக்ஷ்மி பள்ளியின் 60 ஆம் ஆண்டு வைரவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது..


சிறுமுகை எஸ்ஐவி விஜயலட்சுமி பள்ளியின் அறுபதாம் ஆண்டு வைர விழா நேற்று முன்தினம் பள்ளியில் விஜயலட்சுமி கலையரங்கில்  நடைபெற்றது. வைர விழா எஸ் ஐ வி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் டாக்டர் லெனின் பாபு மற்றும் யாமினி தனராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயகாந்தன், வேணுசங்கர் ,எழில் வண்ணன் ,பிந்து, ரவி ,ஆகியோர் வரவேற்றனர். இந்த வைர விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களின் நகைச்சுவை முறையும் சன் டிவி விஜய் டிவி தொலைக்காட்சி புகழ் கோவை அசோக் குழுவினரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த வைர  விழா  நிகழ்ச்சி மூலமாக முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் வகுப்பறைகளுக்கு சென்று தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழாவில் நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad