திருமங்கலம் அருகே 600ஆண்டு பழமை வாய்ந்த தென் திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடாசலபதி பெருமாள் கோவில் தேரோட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

திருமங்கலம் அருகே 600ஆண்டு பழமை வாய்ந்த தென் திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடாசலபதி பெருமாள் கோவில் தேரோட்டம்


திருமங்கலம் அருகே 600ஆண்டு பழமை வாய்ந்த தென் திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடாசலபதி  பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.



சிந்துபட்டி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தேரோட்ட திருவிழா நேற்று வெகு விமர்சனையாக நடைபெற்றது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தென் திருப்பதி என்று அழைக்கப்படுவது இதன் சிறப்பு. இந்தத் திருவிழா கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 23 ஆண்டுகள் பின்பு இந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்தக் கோயிலுக்கு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஊர் கிராமத்தில் உள்ள 10 மண்டக படித்தாரர் ஏற்பாட்டின் படி கடந்த 11ஆம் தேதி கொடியேற்று விழாவுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒரு மண்டகப்படிதாரர் ஏற்பாட்டின் படி பெருமாள் வீதி உலா செல்வார். திருவிழாவின் ஒன்பதாவது நாளாக தேரோட்டம் திருவிழா நேற்று நடைபெற்று து. நாளை (இன்று)புஷ்ப பல்லாக்கில் வீதி உலா செல்ல உள்ளார்.12 நாள் நடைபெறும் திருவிழாவில் ஒன்பதாவது நாள் முக்கியமான தேர் திருவிழா ஆகும்.ஏற்கனவே பழுதான தேர்  உபயதாரர்கள் மூலம் பராமரிப்பு பணி செய்யப்பட்டு தற்போது தேர் பவனி வருகிறது.தேர் உலா வரும் பொழுது பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் பெற்று சென்றனர்.அவரவர்கள் வீட்டு முன்பு நின்று ஆரத்தி எடுத்து இறைவன் அருள் பெறுவார்கள்.11ஆம் தேதி கொடியேற்றம் அதனைத் தொடர்ந்து ஹம்சவாகன வீதி உலா, சிம்ம வாகன வீதி, சிறியன் திருவடி, சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், அஸ்டாங்க விமானம், குதிரை வாகனம், தேர் திருவிழா, புஷ்ப பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு பவனியை தொடர்ந்து இறுதி நாள் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.தினமும் இரண்டு நேரம் பக்தர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் மதியம் இரவு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு 16 ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது.இந்த தேர் திரு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் திருப்பணி குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஊர் பொதுமக்கள், பெண்கள், அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad