விழுந்து கிடக்கும் பேருந்து நிலையம் கண்டுகொள்ளாத ரோட்டரி கிளப்
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மஞ்சூர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் முத்தோரை பாலாடா அடுத்து அமைந்திருக்கும் வி பி என் பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் அங்கு வசித்து வரும் பொது மக்களுக்கும் மிகவும் பெரிதும் பயன்படும் வகையில் இருந்து வந்துள்ளது இப்பொழுது அது சரிந்து விழுந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ரோட்டரி கிளப் நிர்வாகம் இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் பாதிப்படைகின்றனர். மற்றும் இன்னும் ஒரு வாரங்களில் பள்ளிகள் தொடங்க உள்ளதால் மழை காலங்களில் ஒதுங்குவதற்கும் பள்ளி மாணவ மாணவிகள் சிரமம் அடைவார்கள் என கருதப்படுகிறது உடனடியாக ரோட்டரி கிளப் நிர்வாகம் பேருந்து நிலையத்தை சரி செய்து பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக