தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமண்டலம் பிச்சிவிளையில் உள்ள கிறிஸ்து ஆலயம் தோற்றுவிக்கப்பட்டு 143 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆலயத்தின் 12 வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 63 வது அசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திரு விருந்து ஆராதனை நடைபெற்றது. மாலை 4:30 மணிக்கு பரி. ஞானஸ்நான ஆராதனை, இரவு 7 மணிக்கு கன்வென்ஷன் கூட்டம் நடைபெற்றது.
திங்கட்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு ஐக்கிய விருந்து நிகழ்ச்சியும், 11 மணிக்கு ஞானஸ்நான ஆராதனையும் நடந்தது. மாலை 4 மணிக்கு அசனை விருந்து நடைபெற்றது. பிச்சிவிளை சபை குருவானவர் அருட்திரு சந்தோஷ் பிரபு ஜெபத்துடன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
டார்லிங் மசாலா& எவரெஸ்ட் குழும தலைவர் சாம்சன், எடிசன் அசனத்தை துவங்கி வைத்தனர். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர். அசன நிகழ்வினை ரத்தின பாண்டியன் மற்றும் அசன குழுவினர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
விழா ஏற்பாடுகளை அசன விழா கமிட்டி தலைவர் அட்லி பிரபு, துணை தலைவர் சிம்சோன், செயலாளர் மதன்குமார் ,துணைச் செயலாளர் ஆசீர் ஜார்ஜ் ,பொருளாளர் ககாரின் ஜெப சீலன், மற்றும் அசன கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக