கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூத்தனூர் கிராமத்தில் சொத்து தகராறில் நிருபரை தாக்கியுள்ளனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூத்தனூர் கிராமத்தில் சொத்து தகராறில் நிருபரை தாக்கியுள்ளனர்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூத்தனூர் கிராமத்தில் சொத்து தகராறில் நிருபரை  தாக்கியுள்ளனர்


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சேர்ந்த நமது கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் குருசாமி அவர்களின் தகப்பனார் இவர் பெயரில் எழுதி வைத்த சொத்தானது  உளுந்தூர்பேட்டை வட்டம் கூத்தனூர் கிராமத்தில் உள்ள அந்த இடத்தை கூத்தனூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி செட்டியார் மகன் குமார் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தகவல் அறிந்த குருசாமி நேரில் சென்று விசாரிக்கும் பொழுது அவர்கள் தவறான வார்த்தைகள் கூறி கொலை செய்யும் முயற்சியில் குமார் மற்றும் அவரைச் சார்ந்த மூன்று நபர்கள்  தாக்கியுள்ளனர் இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்தார் மேலும் குருசாமி என்பவரை அருகில் இருந்தவர்கள் தூக்கி  தண்ணீர் கொடுத்துள்ளனர் மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர் தற்போது குருசாமி அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad