கூடலூர் போக்குவரத்து கழகத்தில் இயக்கக்கூடிய பேருந்து எண் 778
கூடலூர் பந்தலூர் வழியாக இயங்கி வருகிறது இந்த பேருந்து அய்யன்குலி சென்று கூடலூர் திரும்பி செல்லும் வழியில் பொன்னானி என்கிற பகுதியில் சக்கரம் பழுதாகி வழியில் நின்றது இந்த பேருந்தில் உள்ள மாற்று சக்கரம் எடுத்து மாற்றுவதற்கு ஓட்டுனர் முயற்சி செய்து சக்கரத்தை கழற்றி மாட்டும் போது பேருந்தில் இருந்த மாற்று சக்கரமும் பழுதாகி நடுவழியில் நின்றது மழை பெய்யும் நேரத்திலும் பயணிகள் பேருந்தில் வந்தவர்கள் நடுவில் நிற்கும் அவலத்தை ஏற்படுத்தி விட்டது
இந்தப் பேருந்து கூடலூரில் இருந்து குந்தலாடிக்கு செல்லும் கடைசி பேருந்தாகும் சுமார் 7.45 மணிக்கு கூடலூரில் இருந்து புறப்பட வேண்டிய பேருந்து மாற்றுச்சக்கரம் இல்லாமல் தற்போது பொன்னானியில் நிற்பதால் கடைசி பேருந்தை நம்பி இருக்கும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது கனமழை பெய்யும் நேரத்தில் போக்குவரத்து கழகத்தின் அலட்சியத்தால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் இனிவரும் காலங்களில் பேருந்துகளுக்கு மாற்று சக்கரமும் சரியான முறையில் வழங்க வேண்டும் எனவும் அது போல் மாற்றுச்சக்கரம் கழட்டி போட்டு அதற்கான உபகரணங்கள் முறையாக வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக