அரசு கல்லூரியில் ரூ. 7.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறப்பு!
ராணிப்பேட்டை , மே 21 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் இயங்கிவரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ரூபாய் 7.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்
பட்டுள்ள 25 வகுப்பறைகள் கொண்ட
புதிய கட்டடத்தினை தமிழக முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கல்லூரி முதல்வர் யூசப் கான்,நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, நெமிலி ஒன்றிய திமுக செயலாளர்கள் பெருமாள் ரவீந்திரன், மணிவண்ணன்,மத்திய
ஒன்றிய அவைத் தலைவர் நரசிம்மன். உடற்கல்வி இயக்குனர் நடராஜன் வணிக வியல் துறை தலைவர் குமார்,கணினி பயன்பாட்டில் தலைவர் சுகுமாரி, ஆங்கிலத் துறை தலைவர் சாமுவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் உள் ளிட்ட கட்சி நிர்வாகிகள், கல்லூரியின் ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக