கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக திமுக நிர்வாகி மீது புகார்! நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மாணவி குமுறல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக திமுக நிர்வாகி மீது புகார்! நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மாணவி குமுறல்!

 கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக திமுக நிர்வாகி மீது புகார்!  நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மாணவி குமுறல்!

ராணிப்பேட்டை ,மே 21 -

தளபதி ஐயா பெண்களுக்கு நீங்களே நீதி வாங்கி தரல உங்க கட்சியில இது போன்ற சம்பவங்கள் நடந்தால் பெண்களாகிய நாங்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டு தான் சாகனும் மாணவி கதறல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் பகுதியைச் சேர்ந்த பலராமன் பவானி தம்பதிகளின் இளைய மகளான ப்ரீத்தி (வயது 21) ஆட்டுப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவியை நடுரோட்டில் சந்தித்து தனக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக் கை வைத்தார்.அதில் அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வ சாயல் என்பவர் திமுகவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப் பாளராக பதவி வகித்து வருகிறார் என்றும், அவருக்கு திருமணம் ஆகிய நிலையில் தன்னை ஏமாற்றி காதலிப் பதாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி சோளிங்கர் கரிக்கல் கோவிலில் பெரியோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும், மார்ச் மாதம் வரை சுமூகமாக சென்ற வாழ்க்கையில் திடீரென தெய்வச்சாயல் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்கு தன்னை இறையாக்க முயற்சித்ததாக ப்ரீத்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த செயலுக்கு ப்ரீத்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தினந்தோறும் கடுமையாக தாக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். 
இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி தெய்வ சாயல் கொடுமை களை தாங்கிக் கொள்ள முடியாத பிரீத்தி தற்கொலைக்கு முயன்று முதற்கட்டமாக அரக்கோணம் அரசு மருத்துவமனை யிலும் அதனை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவித்தார். மேலும் தற்கொலை முயற்சி குறித்து காவல் துறையினர் எவ்வித விசாரணை மேற் கொள்ளவில்லை என ப்ரீத்தி தெரிவித் தார் அதனைத் தொடர்ந்து ப்ரீத்தி தன்னு டன் வரவில்லை என்றால் ப்ரீத்தியின் பெற்றோர்களை வாகனம் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டி பலமுறை தன்னுடன் வாழ அழைத்துச் சென்ற தாகவும், கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாத பிரீத்தி நிரந்தரமாக தனது தாய் வீட்டிற்கு வந்து தன்னுடைய கல்லூரி படிப்பை மீண்டும் தொடர்ந்து வந்ததாக தெரிவித்தார். இருப்பினும் தெய்வ சாயல் ப்ரீத்தியை விடாமல் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததா கவும் இது குறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற போது தங்களுடைய எல்லை இல்லை என திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற போது ஆய்வாளர் காவல் நிலையத்தில் இல்லாத காரணத்தினால் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அரக்கோணம் நகர காவல் நிலையத்திலும் தான் அலை கழிக்கப்பட்டதாக கூறி நேரடியாக ராணிப் பேட்டை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தை நாடியுள்ளார். 
அங்கு புகார் மனு பெறப்பட்டு மீண்டும் அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபோன்று தொடர்ந்து புகார் மனு பெறாமல் மாணவி பிரீத்தி அலை கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். இறுதியாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரை நிகழ்ச்சியில் சந்தித்து தனக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் எனவும், மேலும் திமுக பின்புலம் கொண்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினர் தயக்கம் காட்டி வருவதால் தனக்கு ஆதரவாக இருக்கும்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினரை வேண்டிக் கொண்டார். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு மாணவி ப்ரீத்திக்கு நீதி கிடைக்கும் வரை தனக்கு ஆதரவாக இருப்பதாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவி தெரிவித்தார். 
அதனைத் தொடர்ந்து மாணவி பிரீத்தி தன்னிடம் இருந்த ஆதாரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கினார். 
மேலும் ப்ரீத்தி செய்தியாளர்களுடன் பேசுகையில் தளபதியா தற்போது நடக்கிற உங்கள் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு நீங்களே நீதி வாங்கி தரல மேலும் உங்க கட்சியினர் இது போன்று நடந்தால் பெண்கள் ஆகிய மக்கள் எல்லாம் தற்கொலை செய்துகொண்டு சாகணும் என  கேள்வி எழுப்பினார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad