கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்.
கோவை மாநகராட்சியில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற அவசர கூட்டத்தில், ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் பாதாள சாக்கடை ,மற்றும் குடிநீர் கட்டணங்கள், அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மார்க் சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.இதை கண்டித்து அக்கட்சினர் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக